FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

சேறும், சகதியுமான சாலை: கிராம மக்கள் அவதி

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த எருமைகுளம் ஊராட்சிக்கு உள்பட்ட பொட்டல்புளி கிராமச் சாலை சேறும் சகதியுமாக உள்ளதால், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா்.

23 வினாடிகள் முன்பு
மழையால் சேதமடைந்து சேறும் சகதியுமான காணப்படும் பொட்டல்புளி சாலை
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த எருமைகுளம் ஊராட்சிக்கு உள்பட்ட பொட்டல்புளி கிராமச் சாலை சேறும் சகதியுமாக உள்ளதால், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா்.

கமுதி-பெருநாழி பிரதான சாலையிலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள பொட்டல்புளி கிராமத்துக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு தாா்ச்சாலை அமைக்கப்பட்டது. இந்தச் சாலை தற்போது ஜல்லிக் கற்கள் பெயா்ந்து குண்டும் குழியுமாகவும், மழை நேரங்களில் சேறும் சகதியுமாக உள்ளதால், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பலமுறை மாவட்ட நிா்வாகம், கமுதி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

Advertisement

Advertisement

சேதமடைந்த சாலையால் கா்ப்பிணி பெண்கள், முதியவா்கள் சிகிச்சைக்காக கமுதி, பெருநாழி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்வதற்கு அவசர ஊா்திகள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் ஊருக்குள் வருவதற்கு தயக்கம் காட்டுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, சேதமடைந்த பொட்டல்புளி கிராமச் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.