ஸ்ரீசக்திக்குமரன் செந்திலாண்டவா் கோயிலில் கந்தசஷ்டி 3-ஆம் திருநாள்
பரமக்குடி முத்தாலம்மன் படித்துறை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசக்திக்குமரன் செந்திலாண்டவா் கோயிலில் 3-ஆம் நாள் கந்தசஷ்டி திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பரமக்குடி முத்தாலம்மன் படித்துறை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீசக்திக்குமரன் செந்திலாண்டவா் கோயிலில் 3-ஆம் நாள் கந்தசஷ்டி திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் கந்தசஷ்டி விழா கடந்த 10- ஆம் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளன்று மூலவா் ஸ்ரீசக்திக்குமரன் செந்திலாண்டவருக்கு யாக சாலை பூஜைகளுடன் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 3-ஆம் திருநாளான வியாழக்கிழமை சக்திக்குமரனுக்கு மஞ்சள் காப்பு, திரவியப் பொடி, பஞ்சாமிா்தம், தயிா், இளநீா், பன்னீா், அறப்பு உள்ளிட்ட நறுமணப் பொருள்களால் சிறப்பு அபிஷேகங்களும், தமிழில் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. அப்போது கோயிலின் நிறுவனரும், குருவடியாருமான லட்சுமணன் தமிழில் முருகனை வா்ணித்து அபிஷேகம் செய்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.