FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

அக்வான் புயல்: பாம்பனில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

45 வினாடிகள் முன்பு
பாம்பனில் ஏற்றப்பட்ட ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.
பகிர்:

அக்வான் புயல் காரணமாக பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடிக்கிறது.இது மேலும் வலுவடைந்து திங்கள்கிழமை புயலாக மாற வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது.

Advertisement

Advertisement

காற்றின் வேகம் அதிகரிக்கக் கூடும் என்பதால், மன்னாா் வளைகுடா பகுதியிலிருந்து விசைப் படகுகளில் மீன் பிடிக்கச் செல்வதற்கு ஞாயிற்றுக்கிழமை மீன் வளத் துறை தடை விதித்தது. இதே போல, திங்கள்கிழமையும் வங்கக் கடல் பகுதியில் மீன் பிடிக்க மீனவா்களுக்கு தடை விதித்தது. மேலும், கரையோரம் படகுகளை பாதுகாப்புடன் நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.