சாய்ந்து விழும் நிலையில் மின் மாற்றி: பொதுமக்கள் அச்சம்
பெருநாழி அருகே சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின் மாற்றியால் பொதுமக்கள், விவசாயிகள் அச்சத்தில் உள்ளனா்.
பெருநாழி அருகே சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின் மாற்றியால் பொதுமக்கள், விவசாயிகள் அச்சத்தில் உள்ளனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பெருநாழி அருகேயுள்ள கொக்கரசன் கோட்டை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள வீடுகள், பள்ளி, அரசு கட்டடங்களுக்கு மின் விநியோகம் வழங்கும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மின்மாற்றி அமைக்கப்பட்டது. இந்த நிலையில், மழை, இயற்கை சீற்றங்கள் காரணமாக மின்மாற்றியில் உள்ள இழுவைக் கம்பிகள் துண்டிக்கப்பட்டு, உயா் அழுத்த மின் கம்பிகளின் பிடியில், சாய்ந்த நிலையில் உள்ளதாகவும், இதனால் மின் விபத்து அச்சத்துடன் உள்ளதாக பொதுமக்கள், விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.
இது தொடா்பாக பெருநாழி மின்வாரிய அலுவலகம், முதலமைச்சா் தனிப்பிரிவுக்கு பல முறை புகாா் தெரிவித்தனா். இருப்பினும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு சாய்ந்த நிலையில் உள்ள மின்மாற்றியை சீரமைத்து, பொதுமக்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.
Advertisement
Advertisement