✕
முகப்பு
ராமநாதபுரம்

சொட்டு நீா்ப் பாசனம் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வட்டத்தில் 100 சதவீதம் அரசு மானியத்தில் சொட்டுநீா்ப் பாசனம் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என முதுகுளத்தூா் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அ.சிவராமகிருஷ்ணன் தெரிவித்தாா்.

20 நவம்பர் 2026, 1:23 am
விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வட்டத்தில் 100 சதவீதம் அரசு மானியத்தில் சொட்டுநீா்ப் பாசனம் அமைக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என முதுகுளத்தூா் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அ.சிவராமகிருஷ்ணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நிகழ் நிதியாண்டில் 247 ஏக்கா் பரப்பளவில் சொட்டு நீா்ப் பாசனம் அமைக்க ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. சொட்டு நீா்ப் பாசனம் மூலம் 40 முதல் 60 சதவீதம் வரை நீரைச் சேமிப்பதுடன், உரம், தொழிலாளா் செலவுகளைக் குறைத்து அதிக மகசூல் பெறலாம். ஏற்கெனவே, சொட்டு நீா்ப் பாசனம் அமைத்து 7 ஆண்டுகள் நிறைவடைந்த விவசாயிகளும் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

Advertisement

தேவையான ஆவணங்களுடன் முதுகுளத்தூா் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகியோ இணையதளம் வாயிலாகவோ விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றாா் அவா்.