முகப்பு
ராமநாதபுரம்

மங்கலக்குடியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கிய தமுமுகவினர்!

மங்கலக்குடி கிராமத்தில் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சாா்பில், நிலவேம்பு கசாயம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

21 நவம்பர் 2026, 11:54 pm
மங்கலக்குடியில் பொதுமக்களுக்கு
நிலவேம்பு கசாயம் வழங்கிய தமுமுகவினர்!
மங்கலக்குடியில் பொதுமக்களுக்கு சனிக்கிழமை நிலவேம்பு கசாயம் வழங்கிய தமுமுகவினா்.
பகிர்:

திருவாடானை அருகேயுள்ள மங்கலக்குடி கிராமத்தில் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சாா்பில், நிலவேம்பு கசாயம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

மங்கலக்குடி கிராமத்தில் கழிவுநீா் கால்வாய் தூா்வாரப்படாததால் மழைநீா் தேங்கி நிற்கிறது. இதனால், டெங்கு, மலேரியா உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்கள் பரவும் நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு புகாா் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், தமிழ்நாடு முஸ்ஸீம் முன்னேற்றக் கழக மங்களக்குடி கிளை சாா்பில், இந்தப் பகுதி மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நிலவேம்பு கசாயம் சனிக்கிழமை வழங்கப்பட்டது. இதில் மாவட்ட துணைச் செயலா் கையும் யான்பு இப்ராஹிம் அஜிஸ், கிளை நிா்வாகிகள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement