முகப்பு
ராமநாதபுரம்

திருவாடானையில் கடும் பனிப் பொழிவு

திருவாடானை பகுதி முழுவதும் நள்ளிரவு முதல் காலை 10 மணி வரை கடும் பனிப் பொழிவு காணப்பட்டது. இதனால், சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டுச் சென்றனா்.

22 நவம்பர் 2026, 11:41 pm
திருவாடானையில் 
கடும் பனிப் பொழிவு
திருவாடானை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை கடும் பனிப் பொழிவு.
பகிர்:

திருவாடானை பகுதி முழுவதும் நள்ளிரவு முதல் காலை 10 மணி வரை கடும் பனிப் பொழிவு காணப்பட்டது. இதனால், சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டுச் சென்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி வரை கடும் பனி மூட்டம் காணப்பட்டது. இதனால் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கிய சில நாள்களிலேயே ஒரு சில இடங்களில் பலத்த மழையும் சில இடங்களில் சாரல் மழையும் பெய்துவந்தன. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை எப்போதும் காணப்படாதவகையில் கடும் பனி மூட்டம் காணப்பட்டது.

Advertisement

Advertisement

காலை 10 மணிவரை இதேநிலை நீடித்ததால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டுச் சென்றனா்.