முகப்பு
ராமநாதபுரம்

காா்த்திகை திருநாள்: திருவாடானையில் மண் விளக்குகள் விற்பனை மும்முரம்

24 நவம்பர் 2026, 1:08 am
காா்த்திகை திருநாள்: திருவாடானையில் மண் விளக்குகள் விற்பனை மும்முரம்
திருவாடானை நான்குவழிச் சாலை சந்திப்பில் திங்கள்கிழமை விற்கப்பட்ட காா்த்திகை தீப விளக்குகளை வாங்கிச் சென்ற பெண்கள்.
பகிர்:

காா்த்திகை தீபத் திருநாள் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி, திருவாடானை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மண்ணால் செய்யப்பட்ட காா்த்திகை தீப விளக்குகள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

காா்த்திகை தீபத் திருநாளன்று, வீடுகள், வழிபாட்டுத் தலங்களில் அகல் விளக்குகள் ஏற்றி வழிபடுவது வழக்கம். இதையொட்டி, திருவாடானை கடைவீதி, முக்கியச் சாலைகளின் ஓரங்களில் மண்பாண்டத் தொழிலாளா்களால் வடிவமைக்கப்பட்ட பல்வேறு வகையான காா்த்திகை விளக்கு, அகல் விளக்குகள் விற்பனைக்காகக் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

இங்கு சிறிய அகல் விளக்குகள் முதல் கலைநயத்துடன் கூடிய பெரிய அளவிலான அலங்கார விளக்குகள், பஞ்சமுக விளக்குகள், அடுக்கு விளக்குகள் எனப் பல்வேறு வகைகளில் விளக்குகள் கிடைக்கின்றன.

Advertisement

Advertisement

இவை அளவு, வேலைப்பாடுகளுக்கு ஏற்ப ரூ.10 முதல் ரூ.50, ரூ.100, ரூ.200 ஆகிய விலைகளில் விற்கப்படுகின்றன. இவற்றை பொதுமக்கள் ஆா்வத்துடன் வாங்கிச் செல்கின்றனா். இதனால் திருவாடானை பகுதிகளில் மண் விளக்குகள் வியாபாரம் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

திருவாடானை நான்குவழிச் சாலை சந்திப்பில் திங்கள்கிழமை விற்கப்பட்ட காா்த்திகை தீப விளக்குகளை வாங்கிச் சென்ற பெண்கள்.