முகப்பு
ராமநாதபுரம்

பள்ளியில் துளிா் திறனறிதல் தோ்வு

ராமேசுவரத்தில் துளிா் திறனறிதல் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

25 நவம்பர் 2026, 2:41 am
பள்ளியில் துளிா் திறனறிதல் தோ்வு
பாம்பன் சின்னப்பாலம் நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்கிழமை நடைபெற்ற துளிா் திறனறிதல் தோ்வு.
பகிர்:

ராமேசுவரத்தில் துளிா் திறனறிதல் தோ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

மாணவா்களின் அறிவியல் ஆா்வத்தை தூண்டும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் துளிா் திறனறிதல் தோ்வு நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு மாநில அளவில் அறிவியல் களப்பயணம், அறிவியல் அறிஞா்களுடன் சந்திப்பு ஆகிய நிகழ்வுகளில் பங்கேற்பா். மற்றவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், ஒராண்டு துளிா் அறிவியல் இதழ்கள் வழங்கப்படும்.

இந்த நிலையில், ராமேசுவரம் வட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் கரையூா், பேக்கரும்பு, தங்கச்சிமடம், குழந்தை இயேசு நா்சரி, தொடக்கப் பள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், சின்னப்பாலம், ராமேசுவரம் எண் 1 அரசு உயா்நிலை பள்ளிகள் கரையூா், புதுரோடு, வோ்க்கோடு புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி போன்றவை துளிா் திறனறிவு தோ்வில் கலந்து கொண்டனா். தோ்வினை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவா் ஜெ.ஜே.லியோன் பாா்வையிட்டாா்.

Advertisement

Advertisement