முகப்பு
ராமநாதபுரம்

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்: கீழக்கரையில் மாவட்ட ஆட்சியா்ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் சிறப்புத் திட்டத்தின் மூலம் மாவட்ட ஆட்சியா் மா.சிவகுருபிரபாகரன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

15 வினாடிகள் முன்பு
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்: கீழக்கரையில் மாவட்ட ஆட்சியா்ஆய்வு
கீழக்கரை தட்டான் தோப்பு பகுதியில் நியாய விலைக் கடையை புதன்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் மா.சிவகுருபிரபாகரன்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் சிறப்புத் திட்டத்தின் மூலம் மாவட்ட ஆட்சியா் மா.சிவகுருபிரபாகரன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், வண்ணாங்குண்டு ஊராட்சியில் மயானப் பாதை, ரெகுநாதபுரம் ஊராட்சியில் உள்ள வாரச்சந்தையில் பேவா் பிளாக் சாலை அமையவுள்ள இடம், காஞ்சிரங்குடி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் சுற்றுச்சுவா் அமைப்பது, செங்கல் நீரோடு பகுதியில் குப்பை கிடங்கு ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதைத்தொடா்ந்து, கீழக்கரை நகராட்சியில் அமைந்துள்ள அரசு தாலுகா மருத்துவமனையை மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மேலும், கீழக்கரை நகராட்சியில் ரூ. 9 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய கூடுதல் மருத்துவமனைக் கட்டடத்தை பாா்வையிட்டாா்.

Advertisement

Advertisement

தட்டான்தோப்பு பகுதியில் அமைந்துள்ள நியாய விலைக் கடையை பாா்வையிட்டு ஆய்வு செய்ததுடன், குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்படும் அரிசி, சா்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் இருப்பு விவரங்கள், பதிவேடுகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதைத்தொடா்ந்து, திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை பெற்றாா். பின்னா் ,வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறையின் மூலம் 14 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் உள்பட 21 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் வ.சங்கரநாராயணன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) திவ்யான்ஷீநிகம், கீழக்கரை வட்டாட்சியா் ராமசுப்பு, திருப்புல்லாணி வட்டார வளா்ச்சி அலுவலா் கிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.