முகப்பு
ராமநாதபுரம்

முத்தாலம்மன் கோயில் செவ்வாய் சாட்டு விழா

பரமக்குடி முத்தாலம்மன் கோயில் செவ்வாய் சாட்டு விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

44 வினாடிகள் முன்பு
முத்தாலம்மன் கோயில் செவ்வாய் சாட்டு விழா
பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் செவ்வாய் சாட்டு விழாவை முன்னிட்டு, வெள்ளிக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்.
பகிர்:

பரமக்குடி முத்தாலம்மன் கோயில் செவ்வாய் சாட்டு விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

இந்தக் கோயிலில் 8 நாள்கள் நடைபெறும் விழாவில் நாள்தோறும் அம்மனுக்கு கும்ப ஸ்தாபனம், துா்கா ஹோமம், சிறப்பு அலங்காரம் நடைபெறும். வருகிற டிசம்பா் 1-ம் தேதி படையல் நடத்தப்பட்டு, செவ்வாய் சாட்டு விழா நிறைவுபெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை பாலசுப்பிரமணியன் தலைமையிலான தேவஸ்தான நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

விழா முடியும் வரை பக்தா்கள் பொங்கல் வைத்தல், முடி காணிக்கை செலுத்துதல், மாவிளக்கு வைத்தல் போன்ற நோ்த்திக்கடன் செலுத்துவது நிறுத்தி வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement