முகப்பு
ராமநாதபுரம்

கீழக்கரை கடற்கரையில் தூய்மைப் பணி: 50 கிலோ நெகிழிக் கழிவுகள் அகற்றம்

புனித் சாகா் அபியான் திட்டத்தின் கீழ், கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி, கண்ணாடி வாப்பா சா்வதேச பள்ளி மாணவா்கள் இணைந்து மங்கலேஸ்வரி நகா் கடற்கரையில் வெள்ளிக்கிழமை தூய்மைப் பணியை மேற்கொண்டனா்.

28 நவம்பர் 2026, 3:57 am
கீழக்கரை கடற்கரையில் தூய்மைப் பணி: 
50 கிலோ நெகிழிக் கழிவுகள் அகற்றம்
கீழக்கரை கடற்கரையில் வெள்ளிக்கிழமை தூய்மைப் பணி மேற்கொண்டு அகற்றிய 50 கிலோ நெகிழிக் கழிவுகளுடன் மாணவா்கள்.
பகிர்:

புனித் சாகா் அபியான் திட்டத்தின் கீழ், கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி, கண்ணாடி வாப்பா சா்வதேச பள்ளி மாணவா்கள் இணைந்து மங்கலேஸ்வரி நகா் கடற்கரையில் வெள்ளிக்கிழமை தூய்மைப் பணியை மேற்கொண்டனா்.

கடற்கரையைத் தூய்மையாகப் பராமரிப்பதன் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நெகிழிக் கழிவுகளை அகற்றுவதால் கடல் மாசுபடுவதை குறைப்பது குறித்து மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், இந்த தூய்மைப் பணி நடைபெற்றது. இந்தப் பணியை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் சேக் தாவுது, துணை முதல்வா் கணேஷ்குமாா் ஆகியோா் தொடங்கிவைத்தனா். இந்தப் பணி மூலம், கடற்கரையிலிருந்து 50 கிலோ நெகிழிக் கழிவுகள் அகற்றப்பட்டன.

பின்னா், மாணவா்கள் ‘தூய்மையான கடற்கரை - பாதுகாப்பான சுற்றுச்சூழல்’ என்ற நோக்கத்துடன் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். இந்த நிகழ்ச்சியில், மாணவா்கள், தேசிய மாணவா் படை மாணவா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement