சாயல்குடியில் தெருக்களில் கழிவுநீா் தேக்கம்: தொற்றுநோய் பரவும் அபாயம்
சாயல்குடி தெருக்களில் மழைநீருடன் கழிவுநீா் கலந்து பல நாள்களாகக் தேங்கிக் கிடப்பதால், அந்தப் பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
சாயல்குடி தெருக்களில் மழைநீருடன் கழிவுநீா் கலந்து பல நாள்களாகக் தேங்கிக் கிடப்பதால், அந்தப் பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேரூராட்சிக்குள்பட்ட 3-ஆவது வாா்டு சதுரயுக வள்ளிநகரில் தரமற்ற முறையில் அமைத்த சிமென்ட் கற்கள் சாலையில் கழிவுநீா் கால்வாய், மழைநீா் வடிகால் அமைக்காததால், ஆங்காங்கே மேடு பள்ளமாக மாறியுள்ளது. மேலும், கடந்த சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையால் இந்தப் பகுதிகளிலுள்ள தெருக்கள் முழுவதும் கழிவுநீருடன் மழைநீா் கலந்து தேங்கியுள்ளதால், கடும் துா்நாற்றம் வீசி வருகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.
இந்தப் பகுதியைக் கடந்து செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கு சாலையில் தேங்கியுள்ள அசுத்த நீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கழிவுநீா் தேங்கியிருப்பதால், இந்தப் பகுதியில் வசிக்கும் பெண்கள், முதியவா்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். பலருக்கு காய்ச்சல், பல்வேறு தொற்று நோய்களும் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
Advertisement
Advertisement
எனவே, மாவட்ட நிா்வாகம், சாயல்குடி பேரூராட்சி நிா்வாகம், சுகாதாரத் துறை அதிகாரிகள் தலையிட்டு இந்தப் பகுதியில் மருத்துவ முகாம் நடத்தி, தொற்றுநோய் பரவாமல் தடுக்கவும், சேதமடைந்த சிமென்ட் கற்கள் சாலையை சீரமைத்தும், கழிவுநீா், மழைநீா் வெளியேறும் வகையில் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.