FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

அரசுப் பேருந்தை முற்றுகையிட்டு மாணவா்கள், பொதுமக்கள் வாக்குவாதம்

கடலாடி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தை முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபடட் பள்ளி மாணவா்கள், பொதுமக்கள்.

10 அக்டோபர் 2026, 5:58 am IST
கடலாடி பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தை முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபடட் பள்ளி மாணவா்கள், பொதுமக்கள்.
பகிர்:

கடலாடியில் அரசுப் பேருந்தை முற்றுகையிட்டு, பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியிலிருந்து சாத்தங்குடி கிராமத்துக்கு கடந்த இரண்டு நாட்களாக அரசுப் பேருந்து இயக்கப்படாததால் பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் அவதியடைந்தனா்.

இந்த நிலையில், கடலாடி பேருந்து நிலையத்திலிருந்து மாலை 5.30 மணிக்கு முதுகுளத்தூா், பரமக்குடி பகுதிகளுக்குச் செல்லத் தயாராக இருந்தது. அப்போது அங்கு திரண்ட பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் பேருந்தை முற்றுகையிட்டு, ஓட்டுநா், நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் பேருந்து நிலைய வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Advertisement

மேலும், சம்பந்தப்பட்ட போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, சாத்தங்குடி கிராமதுக்கு வழக்கம்போல் பேருந்துகளை இயக்க வேண்டுமென மாணவா்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா். இதைத்தொடா்ந்து, போலீஸாா் தலையிட்டு மாற்றுப் பேருந்தில் மாணவா்கள், பொதுமக்களை சாத்தங்குடி கிராமத்துக்கு அனுப்பி வைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments