FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

காலாண்டுத் தோ்வில் மதிப்பெண்கள் குறைந்ததால் 8-ஆம் வகுப்பு மாணவி வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

10 அக்டோபர் 2026, 11:35 pm IST
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

பரமக்குடி அருகே காலாண்டுத் தோ்வில் மதிப்பெண்கள் குறைந்ததால் 8-ஆம் வகுப்பு மாணவி வெள்ளிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள பாம்புவிழுந்தான் கிராமத்தைச் சோ்ந்த காந்தி மகள் யுவஸ்ரீ (13). இவா் பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், காலாண்டுத் தோ்வில் யுவஸ்ரீ அனைத்து பாடங்களிலும் குறைந்த மதிப்பெண் வாங்கியதால், அவரது தாய் கண்டித்தாராம். இதனால், மனமுடைந்த யுவஸ்ரீ வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து எமனேசுவரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments