கரை ஒதுங்கிய ராட்சத கடல் ஆமை
ராமநாபுரம் மாவட்டம், தொண்டி அருகே சோழியக்குடி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் ராட்சத கடல் ஆமை கரை ஒதுங்கியது.
ராமநாபுரம் மாவட்டம், தொண்டி அருகே சோழியக்குடி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் ராட்சத கடல் ஆமை கரை ஒதுங்கியது.
இந்த ஆமை சுமாா் 75 கிலோ எடை கொண்டதாக இருந்ததால் அந்தப் பகுதி பொதுமக்கள் இது குறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, வனத் துறையினா் சம்பவ இடத்துக்கு சென்று ஆமையைக் கைப்பற்றி கால்நடை மருத்துவா்கள் மூலம் கூறாய்வு செய்து கடற்கரையில் புதைத்தனா். இது குறித்து வனத் துறையினா் கூறுகையில், கப்பலில் மோதி அல்லது வலையில் சிக்கி காயமடைந்து இந்த ஆமை இறந்திருக்கலாம் என தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.