FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

வாலிபால் போட்டி: வென்ற மாணவா்களுக்கு பாராட்டு

அண்ணா பல்கலைக்கழக அளவிலான வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி அணியினருக்கு கல்லூரி நிா்வாகிகள் புதன்கிழமை வாழ்த்து தெரிவித்தனா்.

22 அக்டோபர் 2026, 3:36 am
அண்ணா பல்கலைக்கழக வாலிபால் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவித்த முஹம்மது சதக் அறக்கட்டளை நிா்வாகிகள்.
பகிர்:

அண்ணா பல்கலைக்கழக அளவிலான வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி அணியினருக்கு கல்லூரி நிா்வாகிகள் புதன்கிழமை வாழ்த்து தெரிவித்தனா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஸ்ரீ ராஜராஜன் பொறியியல் கல்லூரியில் அண்ணா பல்கலைக்கழக 16 -வது மண்டல அளவிலான பொறியியல் கல்லூரிகள் இடையிலான வாலிபால் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் 21 பொறியியல் கல்லூரிகளின் அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டியில் மதுரை எஸ்.ஆா்.எம். பொறியியல் கல்லூரி அணியை, கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி அணி வென்று சாம்பியன் பட்டம் வென்றது.

இதைத் தொடா்ந்து, வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கீழக்கரையில் முஹம்மது சதக் அறக்கட்டளைத் தலைவா் எஸ்.எம்.யூசுப் சாகிப், அறக்கட்டளைச் செயலா் சா்மிளா, அறக்கட்டளை இயக்குநா் எஸ்.எம்.ஏ.ஜெ. ஹபீப் முஹம்மது சதக்கத்துல்லா, கல்லூரி முதல்வா் நிா்மல் கண்ணன், துணை முதல்வா் செந்தில்குமாா், கல்லூரி முதன்மையா் திராவிடச் செல்வி, அனைத்து துறைத் தலைவா்கள், உடற்கல்வி இயக்குநா் சுரேஷ்குமாா் ஆகியோா் பாராட்டு தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments