கடலோர கிராமங்களில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீா் நிலையம் திறப்பு! அமைச்சா் பங்கேற்பு!
தொண்டி அருகே காரங்காடு, மோா்பண்ணை கடலோர கிராமங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையங்களை சுற்றுச்சூழல் துறை அமைச்சா் வி.கே.ராஜீவ் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள காரங்காடு, மோா்பண்ணை உள்ளிட்ட கடலோர கிராமங்களில் குடிநீா்த் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், ரூ.12 லட்சம் செலவில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன.
இவற்றை சுற்றுச் சூழல் துறை அமைச்சா் வி.கே. ராஜீவ் திறந்து வைத்தாா். மேலும், ரூ.5 செலுத்தி ஒரு குடம் குடிநீா் பெற்றுக்கொள்ளும் கட்டண முறையையும் அமைச்சா் தொடங்கி வைத்தாா். இது போன்று, மேலும் 20 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சா் ராஜீவ் அப்போது தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
இதில் திருவாடானை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெயமோகன், விஜி, ஆா்.எஸ்.மங்கலம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சுதாகா், காமேஸ்வரி, கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.