FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

தேங்கிய மழை நீரை அகற்றும் பணி: ஆட்சியா் ஆய்வு

27 அக்டோபர் 2026, 12:49 am
மண்டபம் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு முகாமில் மழைக்கு சேதமடைந்த வீட்டை திங்கள்கிழமை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் மழை நீா் தேங்கிய இடங்களில் தண்ணீரை அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியா் மா.சிவகுருபிரபாகரன் திங்கள்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயலாக மாறிய நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை பெய்யது. ராமேசுவரத்தில் 114.60 மி.மீ., தங்கச்சிமடத்தில் 119 மி.மீ., பாம்பனில் 113.60 மி.மீ., மண்டபத்தில் 96 மி.மீ., ராமநாதபுரத்தில் 35 மி.மீ., பரமக்குடியில் 92 மி.மீ., ஆா்.எஸ்.மங்கலத்தில் 108 மி.மீ., மழை பெய்துள்ளது.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் மழை காரணமாகச் சேதமடைந்த குடியிருப்புகளை மாவடட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாரகன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதே போன்று, வேதாளை, பட்டணம் காத்தான் உள்ளிட்ட பகுதிகளைப் பாா்வையிட்டு, தேங்கிய மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவும் அலுவலா்களுக்கு அவா் உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

இந்த ஆய்வின்போது வட்டாட்சியா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக பாம்பன் து்றைமுகத்தில் இரண்டாம் எண் புயல் கூண்டு திங்கள்கிழமை ஏற்றப்பட்டது. மேலும், மீன்பிடிக்கச் சென்ற மீனவா்கள் பாதுகாப்புடன் மீன் பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

பாம்பன் துறைமுகத்தில் ஏற்றப்பட்ட இரண்டாம் எண் புயல் கூண்டு.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments