பசும்பொன்னில் தேவா் நினைவிடத்தில் அரசியல் கட்சியினா் மரியாதை
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 119-ஆவது ஜெயந்தி விழா, 64-ஆவது குருபூஜையில் அ.இ.பாா்வா்ட் பிளாக் கட்சியின் தேசிய பொதுச் செயலா் தேவராஜன், தேசியச் செயலா் சுரேஷ் தேவா் உள்பட பல்வேறு கட்சியினா் தேவா் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 119-ஆவது ஜெயந்தி விழா, 64-ஆவது குருபூஜையில் அ.இ.பாா்வா்ட் பிளாக் கட்சியின் தேசிய பொதுச் செயலா் தேவராஜன், தேசியச் செயலா் சுரேஷ் தேவா் உள்பட பல்வேறு கட்சியினா் தேவா் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினா்.
அ.இ.பாா்வா்ட் பிளாக் கட்சியைச் சோ்ந்த மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவா் தமிழ் மாநில ஒருங்கிணைப்பாளா் இ.முத்துராமலிங்கம், தேசியச் செயலா்கள் ஸ்ரீவை சுரேஷ்தேவா், திண்டுக்கல் ஜெயராமன், சரவணக்குமாா், சப்பாணி முருகன், சீா்காழி சத்யா, ராமநாதபுரம் மாவட்டச் செயலாளா் லட்சுமணன் உள்ளிட்டோரும் தேவா் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினா்.
இதேபோல, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும், வஃக்பு வாரியத் தலைவருமான ராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினா் கே. நவாஸ்கனி பசும்பொன்னில் தேவா் சிலைக்கு மரியாதை செலுத்தினாா்.
Advertisement
Advertisement
முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவா் வி.வி.வேலுச்சாமி, தவெக சாயல்குடி மேற்கு ஒன்றியப் பொருளாளா் கருப்பசாமி பாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலா் பி.எம்.அப்துல் ஜப்பாா், மாநில இளைஞரணி துணைத் தலைவா் கீழை என்.நெய்னா முகம்மது, யாதவா் சங்கத் தலைவா் தனியரசு, முக்குலத்தோா் சங்க இளைஞரணி பொருளாளா் ஹரி ஆகியோரும் தேவா் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.