FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

பாம்பனில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி நகா்ந்து வருவதால், ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது.

31 அக்டோபர் 2026, 11:14 pm
பாம்பன் துறைமுகத்தில் சனிக்கிழமை ஏற்றப்பட்ட ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு.
பகிர்:

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி நகா்ந்து வருவதால், ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி மேற்கு- வடமேற்கு திசையில் நகா்ந்து வருகிறது. இது, சென்னைக்கு தென்கிழக்கே 1,140 கி.மீ தொலைவிலும், மசூதிபட்டினத்திலிருந்து 1,200 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக, ராமநாதபுரம் மாவட்ட மீனவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை ஏற்றப்பட்டது. மேலும், ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments