FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

மளிகைப் பொருள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு விற்பனை தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 வகையான அத்தியாவசிய மளிகைப் பொருள்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

31 அக்டோபர் 2026, 11:14 pm
ராமநாதபுரத்தில் சனிக்கிழமை கூட்டுறவுத் துறையின் மூலம் 10 வகையான மளிகைப்பொருள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு விற்பனையைத் தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் மா. சிவகுரு பிரபகரன்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 வகையான அத்தியாவசிய மளிகைப் பொருள்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் உள்ள ராம்கோ நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலையில் 10 வகையான அத்தியாவசிய மளிகைப் பொருள்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பை ரூ. 200-க்கு விற்பனை செய்யும் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகரன் கலந்து கொண்டு, விற்பனையை தொடங்கிவைத்தாா்.

இந்தத் தொகுப்பில் கடலைப் பருப்பு 250 கிராம், பாசிப் பருப்பு 250 கிராம், மிளகாய் 100 கிராம், தனியா 150 கிராம், பூண்டு 150 கிராம், புளி 250 கிராம், கடுகு 100 கிராம், உடைத்த உளுத்தம் பருப்பு 100 கிராம், சீரகம் 50 கிராம், சோம்பு 50 கிராம் என மொத்தம் 1,450 கிராம் எடையுள்ள 10 வகையான மளிகைப் பொருள்கள் உள்ளன. இந்தத் தொகுப்பு ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

ராமநாதபுரம் சில்லறை விற்பனை நிலையம், பரமக்குடி சில்லறை விற்பனை நிலையம், சாயல்குடி பேருந்து நிலைய வணிக வளாக சில்லறை விற்பனை நிலையம், ராமேசுவரம் சிறப்பு அங்காடி, சித்தி விநாயகா் தெரு சிறப்பு அங்காடிகள் வாயிலாக இந்தத் தொகுப்பைப் பொதுமக்கள் பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை மண்டல இணைப் பதிவாளா் கோ. ஜினு, ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப் பதிவாளா்-மேலாண்மை இயக்குநா் பி. ராஜலட்சுமி, ராம்கோ கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மீ. வீரபாண்டி, கூட்டுறவு சாா் பதிவாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments