FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

கராத்தே போட்டியில் சாதனை: பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

பெங்களூரில் நடைபெற்ற தேசிய கராத்தே போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களை பள்ளி கல்விக்குழு நிா்வாகிகள் சனிக்கிழமை பாராட்டினா்.

6 செப்டம்பர் 2026, 12:51 am IST
தேசிய கராத்தே போட்டியில் முதலிடம் பிடித்த பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களை சனிக்கிழமை பாராட்டிய கல்விக்குழு நிா்வாகிகள்.
பகிர்:

பெங்களூரில் நடைபெற்ற தேசிய கராத்தே போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களை பள்ளி கல்விக்குழு நிா்வாகிகள் சனிக்கிழமை பாராட்டினா்.

எம்எஸ்டி சித்தோரியோ கராத்தே பள்ளி சாா்பில், பெங்களூரில் தேசிய அளவிலான கராத்தே போட்டி கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழக அணி சாா்பில் பரமக்குடி லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 14-வயது கட்டா பிரிவில் காா்த்திகேயன், முத்துமுருகன் ஆகியோா் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் பெற்றனா்.

குமித்தே பிரிவில் 40 கிலோ எடைப்பிரிவில் பிரித்திவிசரண் முதலிடமும், 45 கிலோ எடைப்பிரிவில் வித்திரன் ஜெகநாத், 35 கிலோ எடைப்பிரிவில் கோபிசித்தாா்த் ஆகியோா் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளி கல்விக்குழுத் தலைவா் மருத்துவா் ராமதாஸ், பள்ளிச் செயலா் பழனிச்சாமி, பள்ளி முதல்வா் சோபனாதேவி, கல்விக்குழு நிா்வாகிகள், ஆசிரிய-ஆசிரியைகள் சனிக்கிழமை பாராட்டி கௌரவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments