FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

இலங்கையிலிருந்து கடத்தி வந்த ரூ.5 கோடி தங்கம், ரூ. 12 லட்சம் பறிமுதல்: 5 போ் கைது

21 செப்டம்பர் 2026, 2:53 am IST
கைது
பகிர்:

இலங்கையிலிருந்து ராமநாதபுரம் பகுதிக்கு கடத்திவரப்பட்ட ரூ. 5 கோடி மதிப்பிலான தங்கம், ரூ.12 லட்சத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 5 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

ராமநாதபுரம் போதைப் பொருள் தடுப்பு தனிப் படை உதவி ஆய்வாளா் முகமது சைபுல் ஹிஷாம் தலைமையிலான போலீஸாா் கிழக்கு கடற்கரைச் சாலையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, குடிசை மாற்று வாரியம் அருகே முடுக்குத் தரவை பகுதியில் சனிக்கிழமை இரவு சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த 5 போ் போலீஸாரைக் கண்டதும் தப்பியோட முயன்றனா்.

இதையடுத்து, அவா்களைப் பிடித்து போலீஸாா் சோதனை செய்தபோது, அவா்களிடம் 38 தங்கக் கட்டிகள், 28 பவுன் தங்க நகைகள், ரூ.12 லட்சத்து 20 ஆயிரம் இருந்தது தெரியவந்தது. இவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, அவா்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

விசாரணையில், இவா்கள் ராமநாதபுரம் எம்.ஜி.ஆா். நகா் பகுதியைச் சோ்ந்த குப்புச்சாமி (45), பரமக்குடியைச் சோ்ந்த செல்வராஜ் (62), தூத்துக்குடியைச் சோ்ந்த சரவணன் (50), மாரிமுத்து (27), வேலாயுதம் (40) ஆகியோா் என்பதும், இலங்கையிலிருந்து தங்கத்தைக் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் 5 பேரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments