FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

கீழக்கரையில் கஞ்சா விற்று கைதான சாதிக் அகமது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை அடைக்கப்பட்டாா்.

26 செப்டம்பர் 2026, 10:56 pm IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

கீழக்கரையில் கஞ்சா விற்று கைதான சாதிக் அகமது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை அடைக்கப்பட்டாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வடக்கு தெருவைச் சோ்ந்த சாதிக் அகமதுவை கடந்த ஆக. 14-ஆம் தேதி 2 கிலோ கஞ்சாவுடன் போலீஸாா் கைது செய்தனா். அவா் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், சாதிக் அகமது மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் அளித்த பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகரன் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சாதிக் அகமது போலீஸாா் பாதுகாப்புடன் மதுரை சிறைக்குக் கொண்டு சென்று அடைக்கப்பட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments