FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பள்ளியில் மைக்ரோ சாஃப்ட் கணினிக் கல்வி தொடக்கம்

காரைக்குடி அருகே மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் உயர்தர கணினி கல்வியை வழங்குவதற்காக மைக்ரோ சாஃப்ட் ஐ.டி அகாதெமி தொடங் கப்பட்டது.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

காரைக்குடி அருகே மானகிரி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் உயர்தர கணினி கல்வியை வழங்குவதற்காக மைக்ரோ சாஃப்ட் ஐ.டி அகாதெமி தொடங் கப்பட்டது.

மைக்ரோ சாப்ட் நிறுவனமும், வெலோசஸ் கன்சல்டிங் நிறுவனமும் இணைந்து கணினியில் உயர்தரமான கல்வியை வழங்கத்திட்டமிட்டுள்ளது. மானகிரி செட்டிநாடு பள்ளி யில் அதன் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் வெலோசஸ் கன்சல்டிங் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சங்கரன் செட்டூர் இத்திட்டத்தை தொடக்கி வைத்து கூறியது: மைக்ரோ சாப்ட் கணினி கல்வியை 50 பள்ளிகளில் தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

Advertisement

Advertisement

  உயர்கல்வியில் கற்கும் கணினி தொடர்பான பயிற்சி பள்ளியிலிருந்தே கற்பிக்கப்படும். மென்பொருளை பயன்படுத்தி வரும் நாம் அதனை உருவாக்குவதில்லை. இத்திட்டத்தில் மென்பொருளை உருவாக்குபவர்களாக மாணவர்களை மாற்றவிருக்கிறோம்.

மேலும் பல்வேறு நிறுவனங்களின் மென்பொருள் குறித்துப் பயிற்சி அளிக்க இருக்கிறோம் என்றார்.

விழாவில் செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் தலைவர் எஸ்பி. குமரேசன், வெலோசஸ் கணக்கு அதிகாரி சுருதிமேனன், வணிக மேலாண்மை அதிகாரி அலோக்சிங், பள்ளி முதல்வர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 விழாவையொட்டி  மாணவ,மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments