தனியார் பேருந்து மோதி ஒருவர் சாவு
சிவகங்கை அருகே தனியார் பேருந்து, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
சிவகங்கை அருகே தனியார் பேருந்து, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
சிவகங்கை அருகே ஏ.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் பாண்டிவேலு(35). இவர் பாலமுருகன்(22) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் இளையான்குடி நோக்கிச் சென்றுள்ளார். ஊத்துக்குளம் விலக்கு அருகே சென்றபோது, ராமநாதபுரத்தில் இருந்து சிவகங்கை வந்த தனியார் பேருந்து இருசக்கரவாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாண்டிவேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பாலமுருகன் உயிருக்கு ஆபத்தான நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.