FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இடைக்காட்டூரில் நவநீதப்பெருமாள் எழுந்தருளல்

சிவகங்கை மாவட்டம், இடைக்காட்டூர் பகுதியில் திருக்கூடல்மலை நவநீதப் பெருமாள் ஞாயிற்றுக்கிழமை எழுந்தருளினார்.

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

சிவகங்கை மாவட்டம், இடைக்காட்டூர் பகுதியில் திருக்கூடல்மலை நவநீதப் பெருமாள் ஞாயிற்றுக்கிழமை எழுந்தருளினார்.
 மானாமதுரை சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகளால் திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலையில் சூட்டுக்கோல் நவநீதப் பெருமாள் பிரதிஷ்டை செய்யப்பட்டார். இந்நிலையில், ஆண்டுதோறும் ஆடிப் பௌர்ணமிக்கு திருக்கூடல் மலையிலிருந்து உற்சவர் நவநீதப் பெருமாள் மானாமதுரை பகுதிகளில் பவனி வருவது வழக்கம். அதன்படி, மலையிலிருந்து புறப்பட்ட நவநீதப் பெருமாள், வழியில் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி, இடைக்காட்டூர் வந்தடைந்தார். முன்னதாக வாகுடி, அன்னியனேந்தல், குன்றாமணியேந்தல் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டிருந்த திருக்கண்களிலும் பெருமாள் எழுந்தருளினார். அங்கு பக்தர்கள் நவநீதப் பெருமாளை வரவேற்று பூஜைகள் நடத்தினர்.
இன்று மானாமதுரை வருகை: மானாமதுரைக்கு திங்கள்கிழமை மதியம் நவநீதப் பெருமாள் வந்தடைகிறார். அவருக்கு அண்ணாசிலை அருகே உள்ள தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் செங்கல் காளவாசல் தொழிலாளர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments