FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

காரைக்குடி பள்ளியில் தேசிய சதுரங்கப் போட்டி

காரைக்குடி அருகே உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் 11 வயதுக்கு உள்பட்டோருக்கான தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில்

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

காரைக்குடி அருகே உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் 11 வயதுக்கு உள்பட்டோருக்கான தேசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் ஆண்கள் பிரிவில் மகாராஷ்டிர வீரரும், பெண்கள் பிரிவில் தமிழக வீராங்கனையும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
இப்போட்டிகள் கடந்த ஜூலை 28-ஆம் தேதி தொடங்கியது. இதில், 24 மாநிலங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்கேற்றனர். இறுதிச்சுற்றில் ஆண்கள் பிரிவில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த தேவ் ஷா, பெண்கள் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த சவீதா ஆகியோர் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றனர்.
 அகில இந்திய சதுரங்கக் கழக செயலாளர் பாரத்சிங் சௌகான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கிப் பேசினார். விழாவில், விளையாட்டு வீரர் சார்லஸ் பொரோமியோ, மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலர் டி.பி. ராஜ்குமார், செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் தலைவர் எஸ்.பி. குமரேசன், லக்ஷனா சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments