FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மணல் குவாரிக்கு எதிர்ப்பு: மானாமதுரையில் ஆக.16 இல் ஆர்ப்பாட்டம்

மானாமதுரை பகுதியில் மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

மானாமதுரை பகுதியில் மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
 மானாமதுரையில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேரவைக் கூட்டத்துக்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். இதில், ஒன்றியக்குழு புதிய செயலாளராக ஆண்டி தேர்வு செய்யப்பட்டார். 
 மேலும், தெ.புதுக்கோட்டை, செய்களத்தூர், வாகுடி ஆகிய பகுதிகளில் வைகையாற்றுக்குள் மணல் குவாரிகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மானாமதுரை பேரூராட்சி அலுவலகம் முன் வரும் 16-ம் தேதி முதல்கட்டமாக ஆர்ப்பாட்டமும், பின்னர் தொடர் போராட்டமும் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது.
 இக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட அமைப்பாளர் சின்னத்துரை, மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர்கள் கந்தசாமி, ஜெயராமன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments