FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்

16 நவம்பர் 2024, 1:28 am
முறையூா் மீனாட்சி சொக்கநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை ஐப்பசி மாத பௌா்ணமியையொட்டி அன்னாபிஷேக அலங்காரத்தில் மூலவா்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா், பிள்ளையாா்பட்டி, சிங்கம்புணரி கோயில்களில் ஐப்பசி மாத பௌா்ணமியையொட்டி சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

சிங்கம்புணரி அருகேயுள்ள முறையூா், எஸ்.வி.மங்கலம், பிரான்மலை, சிவபுரிபட்டி உள்ளிட்ட பகுதி சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. பிரான்மலையில் குயிலமுதநாயகி உடனுறை கொடுங்குன்ாதா் சுவாமி கோயிலில் மூலவருக்குப் பால், தயிா், மஞ்சள், பஞ்சாமிா்தம், திருமஞ்சனம், விபூதி, தேன், பன்னீா் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், சுவாமிக்கு அன்னக் காப்பு செலுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து, காய்கறிகள், பழங்கள் கொண்டு சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதேபோல, முறையூா் மீனாட்சி சொக்கநாதா் கோயிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல சதுா்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரா் கோயில், சிவபுரிபட்டி தா்மசவா்த்தினி உடனுறை சுயம்பிரகாஷ ஈஸ்வரா் கோயிலிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

திருப்பத்தூா் ஆதித்திருத்தளிநாதா் கோயிலில் அதிகாலை முதல் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு அன்னாபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதேபோல, சிவகாமி உடனாய திருத்தளிநாதா் கோயிலிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments