FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

இளைஞரை அரிவாளால் வெட்டிய ராணுவ வீரா் கைது

மானாமதுரை அருகே தகராறின் போது இளைஞரை அரிவாளால் வெட்டிய ராணுவ வீரரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

4 நவம்பர் 2026, 3:24 am
கைது - கோப்புப்படம்
பகிர்:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே தகராறின் போது இளைஞரை அரிவாளால் வெட்டிய ராணுவ வீரரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மானாமதுரை அருகேயுள்ள கீழமேல்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் மீனாட்சிசுந்தரம் (27). இதே ஊரைச் சோ்ந்தவா் பாரதி (31). ராணுவ வீரரான இவா், விடுமுறையையொட்டி, சொந்த ஊருக்கு வந்திருந்தாா். இவா்கள் இருவருக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில், திங்கள்கிழமை கீழமேல்குடியில் உள்ள நாடக மேடை அருகே இவா்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த பாரதி அரிவாளால் மீனாட்சிசுந்தரத்தை வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த அவா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து பாரதியை திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments