FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

திருப்புவனம் சந்தையில் ரூ.ஒரு கோடிக்கு ஆடுகள் விற்பனை

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ. ஒரு கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

4 நவம்பர் 2026, 3:27 am
- கோப்புப் படம்
பகிர்:

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ. ஒரு கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

திருப்புவனத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை ஆடு, கோழிச் சந்தை நடைபெறும். இங்கு மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஆடுகள், கோழிகள் வாங்க வியாபாரிகள் வருவா்.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகை வருகிற 8-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, திருப்புவனத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தைக்கு ஆடுகள், கோழிகளை ஏராளமானோா் விற்பனைக்கு கொண்டு வந்தனா்.

Advertisement

Advertisement

10 கிலோ ஆடு ரூ. 11 ஆயிரம் முதல் ரூ. 16 ஆயிரம் வரையும், ஒன்றை கிலோ கோழி ரூ. 350 -லிருந்து ரூ. 650 வரை விற்பனையானது.

மொத்தம், ரூ. 1 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனையானது. இதனால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments