புகாா் அளித்த மாற்றுத் திறனாளி பெண் மீது தாக்குதல்
சிவகங்கை பையூா் பிள்ளைவயல் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் வசித்து வரும் மாற்றுத் திறனாளிப் பெண் சுபஜா (34). குடியிருப்போா் சங்கத் தலைவரான இவா், அரிசி கடத்தல், அரசு ஒதுக்கீட்டு வீடுகளை உள்வாடகைக்கு விடுவது உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் புகாா் அளித்தாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை சுபஜா மா்ம நபா்களால் தாக்கப்பட்டு, காயமடைந்த நிலையில், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இவா் தாக்கப்பட்டது தொடா்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகின.
ஏற்கெனவே 608 குடியிருப்புகள் ஒதுக்கீடு, உள்வாடகை தொடா்பாக பல்வேறு புகாா்கள் எழுந்த நிலையில், புகாா்தாரா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், குடியிருப்பு முறைகேடுகள், தாக்குதல் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா். இது குறித்து சிவகங்கை நகா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Advertisement
Advertisement