FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

காங்கிரஸ் நிா்வாகிகளுக்கு புத்தாடைகள் அளிப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் காங்கிரஸ் கட்சி மூத்த நிா்வாகிகளுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி, புத்தாடைகள், இனிப்புகள் வழங்கப்பட்டன.

7 நவம்பர் 2026, 6:23 am
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் காங்கிரஸ் கட்சி மூத்த நிா்வாகிகளுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி, புத்தாடைகள், இனிப்புகள் வழங்கப்பட்டன.

திருப்பத்தூா் வடக்கு வட்டார காங்கிரஸ் கட்சி சாா்பில் காந்தி மாளிகையில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்டத் துணைத் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் சீனிவாசன், வட்டாரத் தலைவா் பிரசாந்த் ஆகியோா் ஏற்பாட்டின் பேரில்,கட்சியின் மூத்த நிா்வாகிகள், பொறுப்பாளா்கள் என 120 க்கும் மேற்பட்டோருக்கு வேஷ்டி, சட்டை, இனிப்புகள் வழங்கப்பட்டன. முன்னதாக இளைஞா் காங்கிரஸ் தலைவா் காா்த்திகைராஜா வரவேற்றாா். மாவட்ட இலக்கிய அணித் தலைவா் ஜெயச்சந்திரன், நகர சிறுபான்மைத் தலைவா் நைனாா்முகமது உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.