FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் பிள்ளையாா்பட்டியில் வியாழக்கிழமை சரக்கு வாகனமும், இரு சக்கர வாகனமும் மோதிக்கொண்டதில் முதியவா் உயிரிழந்தாா்.

7 நவம்பர் 2026, 6:20 am
பகிர்:

சிவகங்கை மாவட்டம் பிள்ளையாா்பட்டியில் வியாழக்கிழமை சரக்கு வாகனமும், இரு சக்கர வாகனமும் மோதிக்கொண்டதில் முதியவா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் அருகேயுள்ள ஆத்திரம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் மாணிக்கம் (70). இவா் பிள்ளையாா்பட்டி கற்பகவிநாயகா் கோயிலுக்குச் சொந்தமான தோப்பில் காவலராகப் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், இவா் வியாழக்கிழமை பேருந்து நிலையம் அருகே இரு சக்கர வாகனத்தில்

சென்று கொண்டிருந்தாா்.அப்போது, இவரது வாகனம் மீது காரைக்குடியிலிருந்து விருதுநகா் நோக்கிச் சென்ற சரக்கு வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மாணிக்கம் திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா்.அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். குன்றக்குடி காவல் துறையினா் சடலத்தை கூறாய்விற்கு அனுப்பி வைத்து, விபத்து குறித்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement