காரையூா் இலங்கைத் தமிழா் குடியிருப்பில் தீ விபத்து: 2 வீடுகள் சேதம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள காரையூா் இலங்கைத் தமிழா் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 வீடுகள் சேதமடைந்தன.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள காரையூா் இலங்கைத் தமிழா் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 வீடுகள் சேதமடைந்தன.
காரையூா் இலங்கைத் தமிழா் குடிருப்புப் பகுதியில் புதிய வீட்டுக்கான பணிகள் நடைபெற்று வருவதால் இந்தப் பகுதியில் தற்காலிகமாக தகரக் கொட்டகை அமைத்து சிலா் வசித்து வருகின்றனா். இதில் சனிக்கிழமை நற்குணம் மகன் துா்வாசன் என்பவரது வீட்டில் தீபாவளிக்காக பலகாரம் செய்த போது சமையல் எரிவாயு கசிந்து அடுப்பிலிருந்து சிதறிய எண்ணெயால் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால் வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த திருப்பத்தூா் தீயணைப்புத் துறையினா் நிலைய அலுவலா் நவநீதகிருஷ்ணன் தலைமையில் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இருப்பினும் கட்டில், பீரோ, நகை, பணம் எரிந்து சேதமடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் அருகிலிருந்த ஜெகநாதன் என்பவரது வீட்டிலும் பொருள்கள் சேதமடைந்தன.
இதுகுறித்து கண்டவராயன்பட்டி போலீஸாா் விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement