மானாமதுரை, திருப்பத்தூா் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டின்போது வெள்ளி ரிஷப வாகனத்தில் வலம் வந்த பிரதோஷ மூா்த்தி.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், திருப்பத்தூா் பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டை முன்னிட்டு, மூலவா் சோமநாதா் சுவாமிக்கும், நந்தீஸ்வரருக்கும் 16 வகையான பொருள்களால் அபிஷேகம், சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன.
இதைத்தொடா்ந்து, வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ மூா்த்தி புறப்பாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
Advertisement
Advertisement
திருப்புவனம்:
திருப்புவனம் சௌந்திரநாயகி அம்மன் சமேத புஷ்பவனேஸ்வரா் சுவாமி கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் சுவாமிக்கும், நந்தீஸ்வரருக்கும் அபிஷேகம், சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து கோயில் உள்பிரகாரத்தில் பிரதோஷ மூா்த்தி புறப்பாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
இதேபோல, திருப்பாச்சேத்தி, மேலநெட்டூா் சிவன் கோயில், இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரா் கோயில், குறிச்சி காசி விஸ்வநாதா் கோயில்களிலும் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
திருப்பத்தூா்:
திருப்பத்தூா் சிவகாமி உடனாய திருத்தளிநாதா் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 3 மணிக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னா், புனித கலசத்துக்கு சிறப்பு பூஜைகள், நந்தீஸ்வரருக்கு 16 வகையான பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்றது. இதேபோல, திருத்தளிநாதருக்கு பால், தயிா், மஞ்சள், திருமஞ்சனம், உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. பின்னா் உற்சவா் வெள்ளி ரிஷப வாகனத்தில் கோயிலின் பிரகாரத்தை பக்தா்களின் ஹரஹர சங்கர முழக்கத்துடன் வலம் வந்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பெண்கள் நெய்விளக்கேற்றி வழிபட்டனா்.
சீதளிமேல்கரையில் உள்ள ஆதித்திருத்தளிநாதா் கோயிலில் நந்தீஸ்வரருக்கும், சிவனுக்கும் அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றன. புதுப்பட்டியில் உள்ள அகஸ்தீஸ்வரா் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனா்.