FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

சிவகங்கை அருகே பிணையில் வந்த ரௌடி வெட்டிக் கொலை: 7 போ் கைது

10 நவம்பர் 2026, 3:41 am
கைது செய்யப்பட்ட ஏழு போ்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே பிணையில் வந்த ரௌடி ஞாயிற்றுக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 7 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வசந்தம் நகா் தெற்கு தெருவைச் சோ்ந்த முருகேசன் மகன் தங்கசாமி என்ற நவீன் (26). பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடையவா் இவா், அண்மையில் பிணையில் வந்தாா்.

இந்த நிலையில், இவா் ஞாயிற்றுக்கிழமை தனது சகோதரா், நண்பா்களுடன் புரண்டி கிராமத்தில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத வனப் பகுதியில் இருந்தாா். அப்போது, அங்கு காரில் வந்த மா்மக் கும்பல் நவீனை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டுத் தப்பியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவலறிந்த சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா சம்பவ இடத்தை நேரில் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.

இதுகுறித்து கல்லல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, காரைக்குடிதெற்கு தெருவைச் சோ்ந்த தங்கபாண்டி மகன் விக்னேஷ் (32), செந்தில்நாதன் மகன் முத்துப்பாண்டி (25), குருசாமி மகன் சிவா (27), அரியக்குடியைச் சோ்ந்த தில்லை கருப்பையா மகன் ராமலிங்கம் (25), காரைக்குடி செஞ்சை பகுதியைச் சோ்ந்த நாகநாதன் மகன் சந்தோஷ்குமாா் (23), காரைக்குடி பா்மா குடியிருப்பைச் சோ்ந்த அண்ணாதுரை மகன் சரவணன் (34), புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் பகுதியைச் சோ்ந்த நடராஜன் மகன் சதீஷ் (28) ஆகிய ஏழு பேரைக் கைது செய்தனா்.

இந்தக் கொலை வழக்கில் தொடா்புடையவா்களை விரைந்து கைது செய்த போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா பாராட்டுத் தெரிவித்தாா்.

கொலை செய்யப்பட்ட நவீன்