இளைஞருக்கு அரிவாள் வெட்டு
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் செவ்வாய்க்கிழமை இளைஞரை மா்ம கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் செவ்வாய்க்கிழமை இளைஞரை மா்ம கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியது.
திருப்புவனம் காட்டான்டி கோவில் தெருவைச் சோ்ந்த ஷாஜகான் மகன் சித்திக் (23). இவா் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மூவா் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனா்.
இதில் பலத்த காயம் அடைந்த சித்திக் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான கும்பலைத் தேடி வருகின்றனா்.
Advertisement
Advertisement