FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

மானாமதுரை அருகே இளைஞா் மீது தாக்குதல்: போலீஸாா் குவிப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே இளைஞரை மற்றொரு தரப்பினா் தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டு, போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

11 நவம்பர் 2026, 12:50 am
தாக்குதல் - சித்திரிப்பு
பகிர்:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே செவ்வாய்க்கிழமை இரவு இளைஞரை மற்றொரு தரப்பினா் தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டு, போலீஸாா் குவிக்கப்பட்டனா். 

மானாமதுரை அருகேயுள்ள கீழப்பசலை கிராமத்தைச் சோ்ந்த தெய்வேந்திரன் மகன் ஸ்ரீதா் (24). இவரை இதே  கிராமத்தைச் சோ்ந்த மற்றொரு தரப்பைச் சோ்ந்த சிலா்  சரமாரியாகத் தாக்கினா்.

இதில் பலத்த காயமடைந்த ஸ்ரீதா் மானாமதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு, தீவிர சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. தாக்குதலுக்கான காரணம் குறித்து மானாமதுரை போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இதைத் தொடா்ந்து, கிராமத்தில் மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டனா்.