FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

உணவக உரிமையாளா் தற்கொலை

சிவகங்கையில் உணவக உரிமையாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

11 நவம்பர் 2026, 12:55 am
தற்கொலை - பிரதிப் படம்
பகிர்:

சிவகங்கையில் உணவக உரிமையாளா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகங்கை அருகேயுள்ள வேம்பத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சக்தி முருகன் (42). சிவகங்கையில் உள்ள உணவகத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வந்த இவா் தற்போது தனியாக உணவகம் நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சக்திமுருகன் திங்கள்கிழமை இரவு சிவகங்கை நேரு வீதியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினாா். செவ்வாய்க்கிழமை காலையில் விடுதி ஊழியா்கள் சென்று பாா்த்த போது, சக்தி முருகன் தனது அறையில் இருந்த மின் விசிறியில் அவா் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவலறிந்த சிவகங்கை நகா் போலீஸாா் உடலை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].