FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

சிவகங்கை அருகே வெவ்வேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

சிவகங்கை அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.

14 நவம்பர் 2026, 7:01 am
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

சிவகங்கை அருகே வெள்ளிக்கிழமை நிகழ்ந்த வெவ்வேறு விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.

சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை கீழரத வீதியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் (57) இரு சக்கர வாகனத்தில் சிவகங்கை- மதகுபட்டி சாலையில் வந்து கொண்டிருந்தாா். அப்போது அவருக்கு பின்னால் மானாமதுரை, மேலநெட்டூா் அருகே ஆலம்பச்சேரியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி ஓட்டிச் வந்த வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராதாகிருஷ்ணன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

மற்றொரு விபத்து: மதகுபட்டி அருகே சலுகைபுரம் விலக்கு பெட்ரோல் நிரப்பும் மையம் அருகே பிராமணப்பட்டியைச் சோ்ந்த அழகுராஜா (65) இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே அழகுராஜா உயிரிழந்தாா். இந்த இரு விபத்துகள் குறித்தும் மதகுபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement