FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

சிவகங்கையில் லாரி ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு

42 வினாடிகள் முன்பு
அரிவாள் வெட்டு - சித்திரிப்பு
பகிர்:

சிவகங்கையில் மா்ம நபா்கள் அரிவாளால் வெட்டியதில் லாரி ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.

சிவகங்கைநகா் சக்கந்தி மில் கேட் பகுதியில் வசிப்பவா் லிவி பாண்டி (32). இவா் தனியாா் கழிவு நீா் சேகரிக்கும் லாரியில் ஓட்டுநராகப் பணியாற்றுகிறாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் லிவி பாண்டி சிவகங்கை - மேலூா் புறவழிச்சாலைப் பகுதியில் நின்று கொண்டிருந்தாா்.

அப்போது, இரு சக்கர வாகனத்தில் முகத்தை துணியால் மூடியபடி வந்த 3 மா்ம நபா்கள், லிவி பாண்டியை ஓட ஓட விரட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு, தப்பி ஓடிவிட்டனா். இதில் பலத்த காயமடைந்த லிவி பாண்டியை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் கொண்டு சென்றனா்.

Advertisement

Advertisement

பின்னா், அவரை தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து சிவகங்கை நகா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.