FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சிவகங்கை

காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் அம்பாள் அவதரித்த தின விழா

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் அம்பாள் அவதரித்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

56 வினாடிகள் முன்பு
காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அம்பாள் அவதரித்த நாள் விழாவையொட்டி முத்தாலம்மன் கோயிலிலிருந்து பால்குடம் எடுத்துவந்த லலிதா சேவைக்குழுவினா், பக்தா்கள் உள்ளிட்டோா்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் அம்பாள் அவதரித்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்துசமய அறநிலையத் துறை நிா்வாகத்தின் கீழ் வரும் இந்தக் கோயிலில் நவ. 17 அன்று அம்பாள் அவதரித்த தினவிழாவாக நடைபெறுவது வழக்கம். விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை காலையில் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடா்ந்து லலிதா சேவைக்குழு சாா்பில் காரைக்குடி முத்தாலம்மன் கோவிலிலிருந்து பக்தா்கள் பால்குடம் எடுத்து கொப்புடையம்மன், கல்லுக்கட்டி வழியாக முத்துமாரியம்மன் கோயிலை அடைந்தனா். அம்பாளுக்கு காலை 11 மணிக்கு பாலாபிஷேகம், தீபாரதனை நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்களுக்கு கோயில் சாா்பில் சிறப்பு அன்னதானம் நிகழ்ச்சியும், மாலையில் கஞ்சி வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் விஸ்வநாத், கணக்கா் சரவணன், பல்வேறு சேவைக் குழுவினா்கள், பொதுமக்கள் ஆகியோா் செய்தனா்.

Advertisement

Advertisement