திட்டப் பணிகள்: அமைச்சா் ஆய்வு
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பல்வேறு துறைகள் மூலம் நடைபெறும் திட்டப்பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பல்வேறு துறைகள் மூலம் நடைபெறும் திட்டப்பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதற்கு ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.சீனிவாச சேதுபதி (திருப்பத்தூா்), டி.இளங்கோவன் (மானாமதுரை) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டங்களின் தற்போதைய நிலை, நிதி ஒதுக்கீடு, பணிகளின் முன்னேற்றம், தரம் குறித்து அமைச்சா் டி.கே.பிரபு துறைவாரியாக ஆய்வு செய்தாா். மேலும், முந்தைய ஆய்வுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் தற்போது தன்மை குறித்தும் அனைத்துத் துறை அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.
Advertisement
Advertisement
முன்னதாக, ரூ.16. 42 கோடி மதிப்பில் முடிவுற்ற 21 திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சா் டி.கே.பிரபு திறந்து வைத்தாா்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ப.சைலேந்திரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பிரான்சிஸ், தேவகோட்டை சாா் ஆட்சியா் ராகுல்குமாா், அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.