முகப்பு
சிவகங்கை

தவெக எம்எல்ஏவை கண்டித்து ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கைது செய்ய வலியுறுத்தி, சிவகங்கையில் சிஐடியூ உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

26 வினாடிகள் முன்பு
தவெக எம்எல்ஏவை கண்டித்து ஆா்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ- வைக் கண்டித்து சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியூ உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவினா்.
பகிர்:

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவை கைது செய்ய வலியுறுத்தி, சிவகங்கையில் சிஐடியூ உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழுவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அங்கன்வாடி ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ஜெயமங்கலம் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டத் தலைவா் எஸ். உமாநாத், செயலா் ஏ. சேதுராமன், பொருளாளா் அய்யம்பாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அங்கன்வாடி ஊழியா் சங்க மாநிலத் தலைவா் இ. பாக்கியமேரி கண்டன உரையாற்றினாா். இதில், நிா்வாகிகள், தோழமைச்சங்க நிா்வாகிகள் வேங்கையா, வீரய்யா, லட்சுமி உள்பட திரளானோா் பங்கேற்று முழக்கமிட்டனா்.