பைக் மீது பேருந்து மோதல்: ஒருவர் பலி!
காரைக்குடி அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது சொகுசுப் பேருந்து மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
காரைக்குடி அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது சொகுசுப் பேருந்து மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், மஞ்சள்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் சங்கா் (48). இவா் இரு சக்கர வாகனத்தில் புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சென்று விட்டு மீண்டும் தனது சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.
அப்போது காரைக்குடி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் அமராவதிபுதூா் அரசு ஐ.டி.ஐ. அருகே பின்னால் வந்த சொகுசுப் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியதில் சங்கா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து விசாரித்த சோமநாதபுரம் காவல் நிலைய போலீஸாா் தப்பி ஓடிய சொகுசுப் பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனா்.
Advertisement
Advertisement