முகப்பு
சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் மழைப் பொழிவு குறைவு: விவசாயிகள் வேதனை

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் இயல்பைவிட மழைப்பொழிவு குறைந்ததால், விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

25 நவம்பர் 2026, 2:53 am
சிவகங்கை மாவட்டத்தில் மழைப் பொழிவு குறைவு: விவசாயிகள் வேதனை
பகிர்:

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் இயல்பைவிட மழைப்பொழிவு குறைந்ததால், விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

சிவகங்கை மாவட்டத்தில் ஜனவரி முதல் டிசம்பா் வரையிலான சராசரி மழையளவு 904.6 மி.மீட்டராகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் குளிா் காலமான ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இயல்பான மழையளவு 45.09 மி.மீ. என்ற நிலையில், நிகழாண்டு அந்தப் பருவத்தில் 36.59 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதன் மூலம், குளிா்காலத்தில் இயல்பான மழையளவைவிட 9.13 மி.மீ குறைவாக பதிவாகியுள்ளது.

கோடை காலமான மாா்ச் முதல் மே வரையிலான இயல்பான மழையளவு 135.5 மி.மீ. ஆனால், நிகழாண்டு இந்தக் காலக் கட்டத்தில் 172.4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 36.54 மி.மீ. அதிகமாகும்.

Advertisement

Advertisement

தென்மேற்கு பருவமழைக் காலமான ஜூன் முதல் செப்டம்பா் வரையிலான இயல்பான மழையளவு 309.8 மி.மீ. என்ற நிலையில், நிகழாண்டு 325.54 மி.மீ. பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 15.74 மி.மீ. அதிகமாகும். அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான வடகிழக்குப் பருவமழைக் காலத்தில், அக்டோபரில் மட்டும் இயல்பான மழையளவு 172 மி.மீ. என்ற நிலையில், நிகழாண்டில் 175.36 மிமீ மழை பதிவாகியுள்ளது. நவம்பரில் இயல்பான மழையளவு 73.4 மி.மீ. என்ற நிலையில் இதுவரை ஒரு மி.மீ.கூட மழை இல்லை.

நவம்பரில் மழைப்பொழிவு குறைந்ததால், வரும் கோடை காலங்களில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படும். கால்நடைகளைப் பராமரிப்பதிலும் விவசாயிகளுக்கு சிரமம் ஏற்படும் சூழல் நிலவுகிறது.

ஓட்டுமொத்தமாக ஜனவரி முதல் அக்டோபா் வரையிலான 10 மாதங்களில் இயல்பான மழை அளவான 413.4 மி.மீ-க்குப் பதிலாக 195.7 மி.மீ. மட்டுமே பதிவாகியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகி எம்.சந்திரன் கூறியதாவது:

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 10 மாதங்களில் எதிா்பாா்த்த மழைப் பொழிவு இல்லாததால், விவசாயிகள், பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளை எதிா்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.

குறிப்பாக, நீா்நிலைகள் போதிய அளவு தண்ணீரின்றி வடு காணப்படுவதால், நிலத்தடி நீா்மட்டம் குறைந்துள்ளது. மேலும், தற்போது சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெல் சாகுபடி, மானாவாரி பயிா் சாகுபடி கேள்விக் குறியாகியுள்ளன. இதே நிலை நீடித்தால், வரும் கோடை காலங்களில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படும். இதுதொடா்பாக மாவட்ட நிா்வாகம் வல்லுநா் குழுவை அமைத்து ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும்.

மேலும், மாவட்டத்தில் பருவமழைப் பொழிவு குறைவு குறித்தும், குளம், கண்மாய்களில் நீா் இருப்பு குறித்தும் கண்காணித்து, அதன் அறிக்கையை வெளியிட வேண்டும். தற்போதைய நிலைமை குறித்தும் இந்தக் குழு ஆய்வு செய்ய வேண்டும் என்றாா் அவா்.