முகப்பு
சிவகங்கை

அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் கட்டிக்குளம் அரசு மேல் நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

15 வினாடிகள் முன்பு
அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு
கட்டிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றிய சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம். உடன் சட்டப்பேரவை உறுப்பினா் இளங்கோவன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ஏ.சி. சஞ்சய் உள்ளிட்டோா்.
பகிர்:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் கட்டிக்குளம் அரசு மேல் நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரத்தின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இந்த வகுப்பறைக் கட்டடங்கள் கட்டப்பட்டன. இதன் திறப்பு விழாவில் மக்களவை உறுப்பினா் காா்த்திக் சிதம்பரம் பங்கேற்று கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை திறந்து வைத்தாா்.

இந்த விழாவில் மானாமதுரை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இளங்கோவன், காங்கிரஸ் மாவட்டத் தலைவா்

Advertisement

Advertisement

ஏ.சி.சஞ்சய், நகரத் தலைவா் பி.புருஷோத்தமன், தலைமையாசிரியை வாசுகி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.